154
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
கொழும்பில் அமைந்துள்ள முக்கியமான வெளிநாட்டு தூதரகம் ஒன்றின் மீது கல் வீசப்பட்டுள்ளது. பிரதேச மக்கள் கல் வீசியுள்ளதாக குறித்த தூதரக அதிகாரிகள் வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சிடம் முறைப்பாடு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் காவல் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த தூதரகம் அமைந்துள்ள காணி தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love