159
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை அசாம் மாநிலத்தின் கரிம்கஞ்ச் மாவட்டத்தை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் அசாம், மேகாலயா, மிசோரம், திரிப்புரா, மணிப்புரா ஆகிய மாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
ரிக்டர் அளவில் 5 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தில ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இதனைத் தொடர்ந்து மற்றொரு நிலநடுக்கமும் ஏற்படலாம் என அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love