162
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
லஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தி ரஷ்யாவின் பொருளாதார வளர்ச்சித்துறை அமைச்சர் உல்யூகேவ் கைது செய்யப்பட்டுள்ளார். முக்கியமான 2 எண்ணெய் நிறுவனங்களிடம் 50 சதவீத பங்குகளை வாங்கும் நோக்குடன் உல்யூகேவின் அமைச்சகம் சாதகமான மதிப்பீடு வழங்கியமைக்காக அவர் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்கள் லஞ்சம் பெற்றதாக ரஷ்யாவின் முக்கிய ஊழல் எதிர்ப்பு அமைப்பான விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட அமைச்சர் மீது இது தொடர்பான குற்றச்சாட்டுகள் விரைவில் பதிவு செய்யப்படும் என்று விசாரணை குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Spread the love