குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஹாவா குழுவினை இராணுவத்தினர் வழிநடத்தவில்லை எனவும் எனினும் இந்தக்குழுவில் முன்னாள் இராணுவ உத்தியோகத்தர்கள் எவரேனும் அங்கம் வகிக்கின்றார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஹாபா குழு தொடர்பில் பாராளுமன்றில் ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.
ஹாபா என்பது மோட்டார் சைக்கிள் கும்பல் எனவும் சில காலமாக இந்தக் குழுவினர் மக்களை துன்புறுத்தி வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ள அவர் இவ்வாறான ஓர் குழுவினை வழிநடத்த வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரில் ஒருவர் முன்னாள் இராணுவ அதிகாரி என சுட்டிக்காட்டியுள்ள அவர் இந்த அதிகாரி சில காலம் படையில் கடமையாற்றியுள்ளார் எனவும் விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.