மாநகர சபையின் சுகாதார மற்றும் வேலைப் பகுதிகளில் தற்காலிமாக பணியாற்றி வருகின்ற தொழிலாளர்கள் தமது போராட்டத்தை நாளை காலைவரை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளனர். ஒன்பதாவது நாளாக இன்று காலை பருத்தித்துறை வீதியில் உள்ள யாழ் மாநாகரசபை அலுவலகத்திற்கு முன் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளை அங்கு சென்ற யாழ்.காவல்துறை அத்தியட்சகர் உத்தியோகத்தர்களை உள்ளே செல்ல அனுமதிக்குமாறு கோரியதனைத் தொடர்ந்து அவருடன் முரண்பட்ட போராட்டக்காரார் தொடர்ந்து இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து மாநகர உத்தியோகத்தர்கள் உட்செல்ல அனுமதித்துள்ளனர்.
இதேவேளை தாங்கள் நீதிக்கு புறம்பாகவோ அல்லது காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினருக்கு எதிராக போராடவில்லை எனவும் தமது நியாயமான கோரிக்கைகளுக்காகத்தான் போராடுவதாகவும் வட பிராந்திய ஐக்கிய தொழிலாளர் சங்க தலைவர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
காவல்துறை அத்தியட்சகர் வழங்கிய உறுதியளித்ததனைத் தொடர்ந்தே உத்தியோகத்தர்களை உட் செல்ல அனுமதித்து தமது போராட்டத்தை தற்காலிகமாக நாளை காலைவரை நிறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.