முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் முடிவாக மாநகர சபையின் சுகாதார மற்றும் வேலைப் பகுதிகளில் தற்காலிமாக பணியாற்றி வருகின்ற தொழிலாளர்கள் தமது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளனனர்.
ஜனாதிபதி செயலகம் வரை தனது தலைமையில் பிரச்சினை முன்னெடுத்து செல்லப்படுமென உறுதியளித்துள்ள சிவாஜிலிங்கம் முதற்கட்டமாக 90 தொழிலாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதாகவும் தொடர்ந்து அடுத்து கட்டம் கட்டமாக ஏனையவர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படுமெனவும் வழங்கிய உறுதி மொழியினை போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்ததுடன் நாளை முதல் வேலைக்கு திரும்புவதாகவும் உறுதியளித்துள்ளனர்.
மேலும் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள்; நிறைவேற்றப்படாத பட்சத்தில் மீண்டும் போராட்டம் மீண்டு வெடிக்குமென தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.