குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
சீனாவிற்கு 15000 ஏக்கர் காணி வழங்குவது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கேள்வி எழுப்பியுள்ளார். முதலீட்டு நோக்கத்திற்காக சீனாவிற்கு அரசாங்கம் 15000 ஏக்கர் காணி வழங்கத் தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானம் ஏற்புடையதல்ல என முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்றில் உரையாற்றிய போது குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் காணிகள் இலங்கைக்கு சொந்தமானது எனவும் இந்த காணிகள் இலங்கை முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ள அவர் வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கைக்கு காணிகளை விற்பனை செய்யப் போவதில்லை எனவும், இலங்கையர்கள் ஏன் காணிகளை வெளிநாட்டவருக்கு விற்பனை செய்ய வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.