குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ஐரோப்பாவில் குடியேறியுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.யுத்தத்தின் பின்னர் இலங்கையில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஐரோப்பாவில் குடிபெயர்ந்துள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் பாதைகளை அமைப்பது மட்டும் நாட்டின் அபிவிருத்தியாக கருதப்பட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
1 comment
இன்னும் தமிழர்களின் பிரச்சனைகளை இலங்கை அரசால் தீர்க்கப்படவில்லை, சிறை கைதிகள் விடுதலை பண்ணப்படவில்லை, உள்ளூர் மக்களுக்கு ஓர் தீரவில்லை, வடக்கு கிழக்கில் சமாதானம் இன்னும் வரவில்லை, போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் நல்ல வாழ்க்கைக்கு திரும்பவில்லை, இதில்வேறு புலம்பெயர் தமிழர்களை ரணில் இலங்கைக்கு எடுக்கப் போகின்றாரா, ஏன் இலங்கையில் மக்கள் இளசுகள் இல்லையா, பொருளாதாரத்தைக் கட்ட, முன்னேற்ற, சிங்களவர்கள் தமிழர்களின் நலனில் அக்கறை இல்லை, இன்று உள்ளூர் தமிழர்களினால் பிரச்சனை இல்லை, இராணுவம் போலிசை வைத்து அவர்களை வெருட்டலாம், ஆனால் புலம்பெயர் தமிழர்களினாலே இன்று இலங்கை அரசுக்கு ஆப்பு, இதனைக் கருத்தில் கொண்டே ரணில் புலம்புகின்றார், இந்த நேரத்தில் புலம்பெயர் தமிழர்கள் மிகவும் கவனமுடன் இருக்கவேண்டும், போராட்டம் பண்ணல் கொடும்பாவிகளை எரித்தல் சிலை வணக்கம் போன்றவற்றை விட்டு, நல்ல மனிதர்களாக வாழ்ந்தாலே, ஐரோப்பாவும் தமிழர்களை அங்கே வைத்திருக்கும், இல்லை என்றால் விஜட்நாம் மக்கள் போன்றே, எதிர்காலத்தில் ஈழத் தமிழர்களுக்கும் ஐரோப்பியர்கள் செய்வார்கள்,====================