172
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புதிய கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ செயற்படுவார் என முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் புதிய அரசியல் கட்சியின் தலைவராக மஹிந்த செயற்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் கட்சி நாட்டில் மிக முக்கியமான ஓர் மாற்றத்தை உருவாக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love