Home இலங்கை எமது சகோதரிகளுக்கு ஆதரவு வழங்க ஒன்றிணைவோம்!

எமது சகோதரிகளுக்கு ஆதரவு வழங்க ஒன்றிணைவோம்!

by admin


பெண்கள் உரிமைக்காகவும், பெண்கள் மீதான பாராபட்சங்களுக்கும் குரல் எழுப்பும் பெண்கள் உரிமைச் செயற்பாட்டாளாகளாகிய எமது சகோதரிகளுக்கு ஆதரவு வழங்க ஒன்றிணைவோம்!

இலங்கையில் புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் இடம்பெற்றுக் கொண்டு வருகின்ற இச்சந்தர்ப்பத்தில் பல்வேறு ஆர்வலர்கள் பல்வேறு மட்டங்களில் சட்ட சீர்திருங்கள் தொடர்பாக பேசிக் கொண்டு வருகின்றனர். இதில் குறிப்பாக பெண்களின் நலன் கருதி பெண்களுக்கு பாரபட்சமாக இருக்கின்ற சட்டங்களிலும் சீர்திருத்தம் வேண்டும் என்ற பேச்சுக்களும் சம காலத்தில் முக்கியத்துவம் வகித்து வருகின்றது. இலங்கையில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக பெண்கள் உரிமைகளுக்காக தலைமைத்துவம் எடுத்து செயற்பட்டுவரும் பெண்கள் உரிமைச் செயற்பாட்டாளர்களாகிய நாங்கள் பெண்களாகிய எமக்கு பாரபட்சமாக இருக்கின்ற சட்டங்களாகிய முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம், தேசவழமைச் சட்டம், கண்டியசட்டம், காணி அபிவிருத்திக் கட்டளைச்சட்டம், அலைந்து திரிவோர் கட்டளைச்சட்டம் மற்றும் தண்டனைச்சட்டக்கோவையில் பிரிவு 365, 365(யு)ஆகியவற்றில் சீர்திருத்தம் வேண்டும் என்று பலவருடங்களாக பல மட்டங்களில் அழுத்தம் கொடுத்துக் கொண்டு வருகின்றோம்

அண்மையில்; புதிய அரசியல் யாப்பின் அடிப்படை உரிமைகள் பகுதியை வரையும் உப குழுவை சந்தித்து பெண்களுக்கு பாராபட்சமாகவுள்ள சட்டங்களை சீர்திருத்துதல் தொடர்பாக இக்குழுவின் பரிந்துரையில் உள்வாங்குதல் பற்றி கலந்துரையாடியிருந்தன் பின்னர் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பின் எமது சகோதரிகளுக்கு எதிராக சமூகத்தில் இருந்து பலவகையான எதிர்ப்புக்கள்; உருவாகியுள்ளது. பெண்களாகிய எம்மின் நலன் கருதி செயற்பட்டு வரும் சகோதரிகள் மீது இவ்வாறான எதிர்பலை உருவாகி இருப்பது எம்மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் தருகின்றது.

எமது சகோதரிகளின் கோரிக்கைகளில் சில:
எமது நலனுக்காக செயற்பட்டு வரும் சகோதரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு அவர்களுக்கு ஆதரவு வழங்குவதுடன்; எமது ஆழ்ந்த அக்கறையையும் இத்தால் தெரிவித்துக்கொள்கின்றோம். சட்டங்களில் உள்ள பாரபட்சம் காரணமாக பெண்கள் பலர் பல வன்முறைகளுக்கு ஆளாகிக் கொண்டு வருகின்றனர். இவ்வாறான பல வன்முறைகள் எம் பெண்கள் மீது இடம்பெறாமல் இருப்பதற்கும் இ;;டம்பெறுகின்ற வன்முறைகளுக்கு பதிலுறுப்புகள் செய்வதற்கும் சட்டங்களில் திருத்தங்கள் கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவ்வாறனதொரு செயற்பாடுகள் எதிர்காலங்களில் இடம்பெறாமல் இருப்பதனை உறுதிப்படுத்தி பெண்கள் உரிமைகளுக்காக தலைமைத்துவம் எடுத்து செயற்பட்டு வரும் எமது சகோதரிகளின் கௌரவத்தை பேணுவதுடன் அவர்களுக்கு ஆதரவளிப்பதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்.

அனர்த்த முகாமைத்துவப் பெண்கள் கூட்டமைப்பு (மட்டக்களப்பு பெண்களின் வலையமைப்பு)

தற்போதைய அரசியல் யாப்பில் இருந்து உறுப்புரை 16 நீக்கப்பட்டு அனைவருக்கும் சமமாக மக்கள் அரசியல் யாப்பாக புதிய அரசியல் யாப்பு உருவாக வேண்டும்.

 தற்போதைய அரசியல் யாப்பில் இடம்பெற்றுள்ள உறுப்புரை 12 ஆனது நாட்டின் அனைத்து குடிமக்களுக்குமான அடிப்படை உரிமைகள், பெண்கள், ஆண்களின் சமத்துவம், பாராபட்சம் காட்டாமை பற்றி கூறப்படுகன்ற அதேவேளை உறுப்புரை 16 ஆனது பாரபட்சங்களுடனான பாரம்பரிய எழுதப்படாத சட்டங்களை வலியுறுத்துகின்றது. இந்த உறுப்புரை 16 ஆனது உறுப்புரை 12 இனை வலுவிளக்கச்செய்வதால் உறுப்புரை 16 அரசில் யாப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும். பெண்களுக்கு பாராபட்சமாக உள்ள தனியார் சட்டங்களில் சீர்திருத்தம் வேண்டும்

 இலங்கையில் இன, மத வேறுபாடுகளின்றி அனைத்து பிரஜைகளுக்கும் ஆகக் குறைந்த திருமண வயதெல்லை 18 ஆக வேண்டும்.

 திருமணமான பெண்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் வீட்டு வன்முறைகளை தோற்றுவிப்பதாகவும் பலவந்தமாக துன்புறுத்தலுக்கும் அடிப்படையாக அமைந்தள்ள சீதனம்ஃகைக்கூலி முற்றாக நீக்கப்பட வேண்டும்.

 இலங்கைப் பிரஜைகள் என்றவகையில் முஸ்லிம் பெண்களுக்கு விவாகப்பதிவாளர்களாகவும், காதிகளாகவும், காதிசபை உறுப்பினர்களாகவும் காதி நீதி மன்றங்களுக்கு வருகைதரும் பெண்களுக்கு ஆதரவளிகக்கவும் சிறந்த கூருணர்வுடைய பெண் காதிகளாகவும் முஸ்லிம் பெண்கள் தங்களது தொழிலை தேர்தெடுக்க சம உரிமை இருத்தல் வேண்டும்.

 அரசின் சம்பளம், வரி கொண்ட நிதி உதவிப் பதவிகள் என்பவற்றுக்கு பால்நிலை அடிப்படையில் பெண்கள் உள்வாங்கப்படாமையும் இதன் காரணமாக தொகை நிர்ணயத்தில் இலங்கை முஸ்லிம் பெண்களுக்கு அரசு நேரடியாக பாரபட்சம் காட்டப்படல் நீக்கப்பட வேண்டும்.

 திருமணத்தின் போது பாதுகாவலர்ஃவளி முறைமை நீக்கப்பட்டு திருமணத்தின் போதான சம்மதம் தொடர்பிலான ஆவணம், கொள்கைகள் என்பவற்றில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும்.
15.11.2016
பெண்களுக்கெதிரான பராபட்சங்களற்ற சட்டங்களை உருவாக்குவதற்கு எம்முடன் இணையுங்கள்
Individuals
1. Ashwiny.B
2. Deanne uyangoda
3. Navaranjini Nadarajah Sureka
4. S. Renuka
5. S.Rahini
6. Rahini . B
7. Setheeswary.Y
8. Shanthi Sivanesan
9. Sritharuni Sritharan
10. Sr. Nichola Emmanuel
11. T.Devarany
12. Udeni Thewarapperuma –Attorney At Law
13. Vanie Saimon
14. Vasuki Jeyashankar – Women’s Rights Activist
15.
16.
17.
18.
19.
20.
21.
Organisations/networks
1. Suriya Women’s Development Centre, Batticaloa
2. Mannar Women’s Development Federation
3. Affected Women Forum – Akkaraipattu

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More