குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரஸ்யாவில் பிரபல சமூக வலையமைப்பான LinkedIn க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு தகவல் சேமிப்பு சட்டத்தை மதிக்காது செயற்பட்டதாக தெரிவித்து நீதிமன்றம் தீர்ப்பளித்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரஸ்யாவில் இந்த சமூக வலையமைப்பில் சுமார் ஆறு மில்லியன் பேர் அங்கத்தினர்களாக இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பினை தொடர்ந்து ரஸ்யாவின் சில உள்நாட்டு இணைய சேவை வழங்குனர்கள் LinkedInஐ முடக்கியுள்ளனர். ரஸ்ய அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தி இது குறித்து பேச உள்ளதாக LinkedIn நிர்வாகம் அறிவித்துள்ளது.
சமூக வலையமைப்புக்கள் ரஸ்ய பிரஜைகளின் தகவல்களை ரஸ்ய இணைய சேர்வர்களில் மட்டுமே சேமிக்க முடியும் என்று ரஸ்யாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள சட்டத்தை மீறியதாகவே LinkedIn மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.