குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இங்கிலாந்து கிரிக்கட் அணியின் தலைமைப் பதவியில் மாற்றம் செய்யப்படாது என அணியின் முகாமைத்துவப் பணிப்பாளர் அன்ட்று ஸ்ட்ரோஸ் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கட் அணியின் தலைவராக தற்போது அலிஸ்டயார் குக் கடமையாற்றி வருகின்றார். இந்திய சுற்றுப் பயணத்திலும் அதற்கு முந்திய பங்களாதேஸ் சுற்றுப் பயணத்திலும் இங்கிலாந்து அணி பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது.
எனினும் உடனடியாக தலைமைத்துவ பதவியில் மாற்றங்கள் செய்யப்படாது என ஸ்ட்ரோஸ் கூறியுள்ளார். பங்களாதேஸ் சுற்றுப் பயணத்தின் போது முழு அணியினரும் பங்கேற்காமை ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.