165
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வரலாற்று சிறப்பு மிக்க ஆவணங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களை பேணிப் பாதுகாப்பதற்கு ஓர் திட்டமொன்று வகுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ள அவர் நூறு வருடங்களுக்கு முன்னைய ஆவணங்கள் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆவணங்களைப் பாதுகாப்பது குறித்த திட்டமொன்றை வகுத்து அமைச்சரவையில் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி துறைசார் அமைச்சருக்கு அறிவித்துள்ளார்.
Spread the love