குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் ஊடாக 50 ஆண்டுகளுக்கு லாபமீட்ட முடியாது என துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்காக பெருமளவு கடன் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் இந்த துறைமகத்தை நிர்மாணம் செய்வதற்கு 750 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டிருக்க வேண்டும் என்ற போதிலும் துறைமுகத்திற்காக மஹிந்த அரசாங்கம் 1.5 பில்லியன் டொலர்களை கடனாக பெற்றுக்கொண்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிகுதி தொகைக் கடனுக்கு என்னவாயிற்று என்பது தெரியாது என குறிப்பிட்டுள்ள அவர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வருமானம் ஈட்டப்படுவதில்லை எனவும் இந்த நிலைமை நீடித்தால் 100 ஆண்டுகள் வரையில் கடன் செலுத்த நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆண்டு தோறும் செலுத்தப்பட வேண்டிய கடன் தொகை அதிகரித்துச் செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.