குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தென் சூடான் மீது தடைகள் விதிக்கப்பட வேண்டுமென அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. தென் சூடானில் இனச் சுத்திகரிப்பு அடிப்படையிலான குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். தென் சூடான் மீது ஆயுத தடை விதிக்கப்பட வேண்டுமென அமெரிக்கா கோரியுள்ளது.
தென் சூடான் ஜனாதிபதி சால்வா கீர் மற்றும் முன்னாள் பிரதி ஜனாதிபதி Riek Machar ற்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 2011ம் ஆண்டு சூடானிடமிருந்து தென் சூடான் சுதந்திரம் பெற்றுக்கொண்டதன் பின்னர் பல்வேறு சர்ச்சைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.