மொசூலில் ஐஎஸ் அமைப்பினரிடம் இருந்து மீண்டும் கைப்பற்றப்பட்ட பகுதி ஒன்றிலிருந்து பலரைக் கொன்று புதைத்துள்ள மற்றொரு மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதைகுழியில் ஈராக் ராணுவத்தினர் பலரை ஐஎஸ் அமைப்பினர் கொன்று புதைத்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மொசூல் நகரத்தின் தெற்கு பகுதியில் உள்ள தால் அத் தஹாப் என்ற கிராமத்தில் பொதுவாக யாரும் செல்லாத ஒரு பகுதியில் அந்த மனிதபுதைகுழி உள்ளமை பத்திரிகையாளர்களுக்குக் காண்பிக்கப்பட்டுள்ளது.
எலும்புத் துண்டுகள் மற்றும் சன்னக் குப்பிகள் அங்குச் சிதறிக்காணப்பட்டதாகவும்; தாங்கமுடியாத அளவில் துர்நாற்றம் வீசியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பெரும்பாலும் ஐ.எஸ் அமைப்பினால் கைது செய்யப்பட்ட சுமார் 40 ராணுவத்தினர்அங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.