500, 1000 ரூபாய் தாள்கள் இனி செல்லாது என அறிவித்த மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து இன்றுகாலை பாராளுமன்றத்தின் வாசலில் கூடிய திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 10ம் திகதி மக்கள் வங்கிகள் முன்னால் நீண்ட வரிசையில் நின்று ரூபாய் தாள்களை மாற்றி வருகிறார்கள். இதற்காக அதிகாலையில் இருந்தே காத்து நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதன் காரணமாக பொது மக்கள் கடும் அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்ற நிலையில் இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிக தீவிரமாக வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால் கடந்த வாரத்தில் இரண்டுநாள் நடைபெற்ற பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஸ்தம்பித்தது.
சனி, ஞாயிறு விடுமுறைக்கு பின்னர், இன்றுகாலை மீண்டும் பாராளுமன்ற கூட்டம் தொடங்கவுள்ள நிலையில் பாராளுமன்றத்தின் வாசலில் கூடிய திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவசரக்கால நிதி நெருக்கடி என ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட பதாகைகளுடன் மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.