தற்போது முஸ்லிங்கள் மற்றும் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகள் தொடர்பில் நாளை (21)ஜனாதிபதியுடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளதாக கிழக்கு மாகாண சபையின் ஊடக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தில் சிறுபான்மையினரை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதியை தௌிவுபடுத்தி சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பில் ஜனாதிபதியிடம் எடுத்துரைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுத் தர ஜனாதிபதியை வலியுறுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஏனைய வேலைத்திட்டங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை விரைவில் பெற்று கொள்ள வேண்டியதன் அவசியம் ,தன் போது வலியுறுத்தப்படவுள்ளது