குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சியை பணி நீக்குமாறு, சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தேசிய அழைப்பாளர் பேராசிரியர் சரத் விஜேசூரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புச் செயலாளரை உடனடியாக அந்தப் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென கோரியுள்ள அவர் தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் கருணாசேனவும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாயவின் வழியை பின்பற்றி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். கோதபாய ராஜபக்ஸவின் விருப்பு வெறுப்புக்களுக்கு அமைய செயற்படும் ஒருவர் நல்லாட்சி அரசாங்கத்திற்கு தேவையில்லை என குறிப்பிட்டுள்ள அவர் பாதுகாப்புச் செயலாளர் பக்கச்சார்பான முறையில் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.