குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜப்பானில் பாரிய நில அதிர்வு ஒன்ற பதிவாகியுள்ளது. நில அதிர்வு காரணமாக சில பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் புக்குசீமா பகுதியில் இவ்வாறு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 7.4 ரிச்டர் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக ஜப்பான் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நில அதிர்வு காரணமாக சிறியளவிலான காயங்கள் சிலருக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு ஏற்பட்ட நில அதிர்வு மற்றும் சுனாமியினால் ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டதுடன் பாரிய அழிவுகள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. முன்னதாக மூன்று மீற்றர் அளவிலான இராட்சத அலைகளுடன் சுனாமி தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் பின்னர் அந்த எச்சரிக்கை வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது.