139
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தற்போது நிலவி வரும் சமாதானத்தை சீர்குலைக்க முயற்சிக்கக் கூடாது என தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கடந்த காலம் பற்றி ஆராய்வதன் மூலம் தற்கால சமாதானத்திற்கு குந்தகம் ஏற்படக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். வரலாற்றில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் பிழைகளுக்கு தண்டனை விதிப்பதன் மூலம் தற்காலத்தில் குரோதம் உருவாகக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே சமாதானத்தை நிலைநாட்டும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
Spread the love