குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
25000 ரூபா அபராதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மோட்டார் போக்குவரத்து விதிகளை மீறும் ஏழு குற்றச் செயல்களுக்கு குறைந்தபட்ச அபராதமாக 25000 ரூபா விதிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
குடிபோதையில் வாகனத்தை செலுத்துவோருக்கான அபராதம் 25000 ரூபாவாக விதிக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ளக்கூடியது என்ற போதிலும், ஏனைய அபராதங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். ஏனைய அபராதங்கள் திருப்தி அளிக்கும் வகையில் அமையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் வருமான மட்டத்திற்கு அமையவே அபராதம் விதிக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். முச்சக்கர வண்டி சாரதி ஒருவருக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டால் அவரது மாத வருமானமே போய்விடும் என அவர் தெரிவித்துள்ளார்.