அமெரிக்காவில் பாடசாலைக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஒரு வாகனம் விபத்துக்குள்ளானதில் 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த குழந்தைகள் 5முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவமானது அமெரிக்காவின் ரென்னஸீ மாநிலத்தில் உள்ள சற்றநூகாவில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. மாலைவேளை பாடசாலை முடிவடைந்து வீட்டுக்கு 35 குழந்தைகளுடன் திரும்பிய வேளை வாகனம் அதி வேகத்தில் சென்றமை காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் இருந்த மரம் ஒன்றில் மோதியதாகவும் மோதிய வேகத்தில் மரம் வாகனத்தில் மேல் விழுந்துள்ளதனால் அந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த 22 குழந்தைகள் அருகாமையில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாரதியை கைது செய்த காவல்துறையினர் வழக்கு தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.