குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அடக்குமுறையின் புதிய வடிவமே புதிய காவல்துறைப் பிரிவு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நல்லிணக்கத்திற்கு எதிரானவர்களை கைது செய்யும் நோக்கில் விசேட காவல்துறைப் பிரிவு ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகவும் பிரிவினைவாத அரசியல் சாசனத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் தரப்பினரை கைது செய்யும் நோக்கில் இந்த புதிய பிரிவினை அரசாங்கம் உருவாக்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்தன, உதய கம்மன்பில, கெஹலிய ரம்புக்வெல்ல போன்ற அரசியல்வாதிகளை கைது செய்து சிறையில் அடைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர் அரசியல் சாசனம் பற்றிய அடிப்படை நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் சமஸ்டி ஆட்சி முறையே அல்லது ஐக்கிய இலங்கைக்குள்ளான முறையா என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
புதிய அரசியல் சாசனம் தொடர்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள போதிலும் இறுதி தீர்மானத்தை எடுப்பது புலம்பெயர் சமூகமா, சுமந்திரனா அல்லது வேறும் ஒர் நாடா என்பது வெளிப்படுத்தப்பட வேண்டுமெனவும் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.