குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தென் ஆபிரிக்க கிரிக்கட் அணியின் தலைவர் Faf du Plessis க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக ஹோபார்ட்டில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் போது பந்தை காயப்படுத்தியதாக Faf du Plessis மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இனிப்புப் பண்டமொன்றை மென்று கொண்டு விரல்களில் அதனை பூசி, அந்த விரல்களைப் பயன்படுத்தி பந்தை சைன் செய்ததாக Faf du Plessis மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுயிங்கம் உள்ளிட்ட இனிப்புப் பண்டங்களை பயன்படுத்தி கிரிக்கட் பந்தை பிரகசாமடையச் செய்து அதன் ஊடாக துடுப்பாட்ட வீரர்களுக்கு பாதக நிலையை ஏற்படுத்தியதாகவும் பந்தின் இயற்கையான தன்மையை செயற்கையாக மாற்றியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Faf du Plessis க்கு அபராம் விதிக்கப்பட்டுள்ள போதிலும் போட்டித் தடை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வாறெனினும் தாம் இந்தக் குற்றச் செயலை மேற்கொள்ளவில்லை என Faf du Plessis தெரிவித்துள்ளார்.