இந்தியாவில் கடந்த 19 ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், மத்தியப் பிரதேசம், அசாமில் பாஜகவும் வெற்றி பெற்றுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.
இந்திய நாடு தழுவிய ரீதியாக 6 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் 4 மக்களவை தொகுதிகள், 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த சனிக்கிழமை இடைதேர்தல் நடைபெற்றது.
மத்தியப் பிரதேசம்
ம.பி.யில் 1 மக்களவை மற்றும் 1 பேரவை தொகுதிக்கு இடைத் தேர்தல் நடந்தது. இரு தொகுதி களையும் பாஜக தக்கவைத்துக் கொண்டது. ஷாடோல் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் கயான் சிங், தனக்கு அடுத்து வந்த காங்கிரஸ் வேட்பாளரை சுமார் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். நேபா நகர் பேரவை தொகுதியில் பாஜக வேட்பாளர் மஞ்சு டாடு வெற்றி பெற்றார்.
அசாம் மாநிலம்
அசாமில் 1 மக்களவை, 1 பேரவை தொகுதிக்கு இடைத் தேர்தல் நடந்தது. இரு தொகுதிகளி லும் பாஜக வெற்றி பெற்றது.
அருணாச்சல் மாநிலம்
அருணாச்சலப் பிரதேசத்தில் 1 பேரவைத் தொகுதிக்கு நடை பெற்ற இடைத்தேர்தலில் வட கிழக்கு ஜனநாயக கூட்டணி வேட் பாளர் டசாங்லு புல் வெற்றி பெற்றார். பாஜக ஆதரவுடன் போட்டியிட்ட இவர், முன்னாள் முதல்வர் கலிக்கோ புல்லின் மூன்றாவது மனைவி ஆவார். கலிக்கோ புல் தற்கொலையால் இங்கு இடைத்தேர்தல் நடந்தது.
திரிபுரா
திரிபுராவில் கோவாய், பர்ஜலா ஆகிய இரு பேரவை தொகுதி களிலும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றுள்ளது. கோவாய் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்ட இக்கட்சி, பர்ஜலா தொகுதியை காங்கிஸிடம் இருந்து பறித்துள்ளது. இவை தவிர தமிழ்நாட்டில் 3 தொகுதிகளில் அதிமுகவும் புதுச்சேரியில் 1 தொகுதியில் காங் கிரஸும் வெற்றி பெற்றுள்ளன.