புனர்வாழ்வு பெற்றபின் பல்கலைகழக கல்வியை பூர்த்தி செய்த பட்டதாரிகளின் வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொடுத்தல் தொடர்பான விசேட பிரேரனை
சமர்ப்பிப்பவர் :- ப.சத்தியலிங்கம்இ சுகாதார அமைச்சர்இ வ.மா
2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது கைதுசெய்யப்பட்ட அல்லது சரணடைந்தவர்களில் புனர்வாழ்வு நிலையங்களில் அரசாங்கத்தால் புனர்வாழ்வழிக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டவர்கள் இடைநிறுத்திய தமது கல்வியை பல சிரமங்களுக்கு மத்தியில் தொடர்ந்து பல்கலைகழகம் சென்று பட்டதாரிகளாக வெளியேறியுள்ளனர்.; வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் மொத்தமாக 35 பட்டதாரிகள் இவ்வாறு வெளியேறி தகுதிக்கேற்ற வேலைவாய்பின்றி கஸ்ரப்படுகின்றனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 11 பேரும்
கிளிநொச்சி மாவட்டத்தில் 12 பேரும்
முல்லைத்தீவு மாவட்டத்தில் 07 பேரும்
வவுனியா மாவட்டத்தில் 04 பேரும்
மன்னார் மாவட்டத்தில் 01 வரும் உள்ளனர்.
இறுதி யுத்ததின்போது தமது உயர்தர பாடசாலைக்கல்வி மற்றும் பல்கலைக்கழக கல்வி என்பவற்றை தொடரமுடியாது இடைவிலகி போராட்டத்தில் இணைந்து அல்லது இணைக்கப்பட்டதன் மூலம் கல்வி கற்பதற்கான சந்தர்ப்பத்தை இழந்தாலும் பல தடங்கல்களுக்கு மத்தியில் தொடர்ந்து தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு பட்டதாரிகளாக வெளியேறியுள்ளனர்.
இவ்வாறாக மனஉறுதியுடன் கல்வியை தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டியது வடக்கு மாகாண சபையின் கடமையாகும். எனவே இவர்கள்மீது விசேட கரிசனைகொண்டு அரச திணைக்களங்களில் முன்னுரிமை அடிப்படையில் வேலைவாய்ப்பை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமென்பதை வலியுறுத்தி இந்த பிரேரணையை இந்த உயரிய சபையின் அனுமதிக்கு சமர்ப்பிக்கின்றேன்.