152
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கூட்டு எதிர்க்கட்சியின் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சிக்கு ஆதரவளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய கட்சியானது நாட்டின் அனைத்து கிராம சேவை பிரிவுகளிலும் கிளைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஸ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் புதிய கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலும் உறுப்பினர்களை திரட்ட கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love