316
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தென் ஆபிரிக்க அணியின் தலைவர் Faf du Plessis தமக்கு எதிராக விதிக்கப்பட்ட தண்டனை தொடர்பில் மேன்முறையீடு செய்ய உள்ளார். பந்தை காயப்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இந்த குற்றச்சாட்டுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் தாம் இந்தக் குற்றச் செயலில் ஈடுபடவில்லை எனவும் தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்ய உள்ளதாகவும் அவர் குறிப்பட்டுள்ளார். எந்த சட்டத்தின் அடிப்படையில் எவ்வாறான முறையில் தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறித்து சர்வதேச கிரிக்கட் பேரவையிடம் கேட்டறிந்துகொள்ள உள்ளதாக தென் ஆபிரிக்க கிரிக்கட் வாரியம் தெரிவித்துள்ளது,
Spread the love