153
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
லங்கா ஈ நியூஸ் இணைய தளத்தின் ஆசிரியர் சந்தருவான் சேனாதீரவை கைது செய்ய சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கம்பஹா பிரதான நீதவானினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றை அவமரியாதை செய்ததாக சந்தருவான் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கம்பஹா நீதவான் காவிந்தியா நாணயக்கார இன்றைய தினம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். வழக்கு ஒன்றுடன் தொடர்புடைய சந்தேக நபர் பற்றிய புகைப்படத்தை தவறாக வெளியிட்டமை குறித்து இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Spread the love