230
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
18 பேருக்கு அவிசாவளை மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 05 ஆம் திகதி அவிசாவளை – தெரணியகல நூரி தோட்ட முகாமையாளர் நிஹால் பெரேரா கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்ட தெரணியகல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அனில் சம்பிக்க விஜேசிங்க எனப்படும் அத்தகொட்டா உள்ளிட்ட 18 பிரதிவாதிகளுக்கே இவ்வாறு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் முகாமையாளரின் காவலாளிகள் மூவர் படுகாயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love