இஸ்ரேலில் ஜெருசலேம் அருகே மேற்கு கரையில் உள்ள 3வது மிகப் பெரிய நகரமான ஹைபா நகரை அண்மித்துள்ள காட்டுப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் காரணமாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமான இந்த தீயை கட்டுப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் காரணமாக புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் பல வீடுகள் அழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அங்கு பெரும்பாலான வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதுடன் தீ மற்றும் புகை காரணமாக சுமார் 130 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த காட்டுத்தீக்கு பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் காரணமாக இருக்கலாம் என இஸ்ரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் இந்த தீயை வைத்துள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் 12 பேரை கைது செய்துள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.