ஈரான் புகையிரத விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 எனவும் காயமடைந்த 70க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் மாகாண கவர்னர் முகமது ரேசா கப்பாஸ் உறுதி செய்துள்ளார்.
முதலில் இவ்விபத்து ஹாப்ட்-கான் புகையிரத நிலையத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்தாகவும் எனினும் அந்த புகையிரத நிலையத்தில் இருந்து 4 கி.மீ. தூரத்திலேயே முன்னால் சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் புகையிரதம் மீது பயணிகள் புகையிரதம் மோதி விபத்துக்குள்ளானதாகவும் தெரிவித்துள்ளார்.
ஈரானில் இரண்டு புகையிரதங்கள் நேருக்குநேராக மோதிக்கொண்டதில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்
ஈரானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள செம்னான் மாகாணத்திலுள்ள ஹப்-கான் புகையிரத நிலையம் வழியாக எதிரொதிராக சென்ற இரண்டு புகையிரதங்கள் இன்று காலை ஒரே தண்டவாளத்தில் நேருக்குநேராக மோதிக்கொண்டதில் 15க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதிய வேகத்தில் இரண்டு புகையிரதங்களின் எஞ்சின் பெட்டிகள் மற்றும் சில பயணிகள் பெட்டிகள் தீப்பிடித் எரிந்தமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.