202
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கியூபாவின் கம்யூனிஸ புரட்சியாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ இன்று தனது 90 வது வயதில் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கியூபாவை ஏறத்தாழ அரைநூற்றாண்டு காலமாக ஆட்சி செய்த கம்யூனிஸ தலைவர் பிடல் காஸ்ட்ரோவுக்கு கடந்த 2006ம் ஆண்டு இரைப்பையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்த காஸ்ட்ரோ தொடர்ந்து தன்னால் ஜனாதிபதி பதவியில் சிறப்பாகச் செயல்பட முடியாது எனத் தெரிவித்து கடந்த 2008-ம் ஆண்டு ஜனாதிபதி பதவியை தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love