குறுகிய அரசியல் நோக்கத்திற்காக இனங்களையும் மதங்களையும் இழிவுபடுத்தி அதனூடாக சமூகங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு நாட்டில் இடமில்லை என்று முன்னாள் ஜனாதிபதியும் தேசிய நல்லிணக்க அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.
வெறுக்கத்தக்க கருத்துக்கள் மூலமாக இனங்களையும் மதங்களையும் இழிவுபடுத்தி அதன் மூலம் சமூகங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு இடமளிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக நாட்டில் அதிகரித்திருக்கும் வெறுக்கத்தக்க கருத்துக்கள் மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்டு இனங்களுக்கிடையில் அமைதியற்ற நிலையை ஏற்படுத்தும் செயற்பாடுகள் குறித்த விடயங்கள் தமது அலுவலகத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.