பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள நப்ஹா சிறைச்சாலையிலிலிருந்து ஆயுதங்களுடன் புகுந்த குழு ஒன்றினால் தப்பிச் செல்ல வைக்கப்பட்ட காலிஸ்தான் விடுதலை இயக்கத் தலைவர் ஹர்மிந்தர் மிண்ட்டூ இன்று காலை டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உயர் பாதுகாப்புக்குட்பட்டுள்ள நப்ஹா சிறைச்சாலைக்குள் சிறையில் காவல்துறையினரின் உடை அணிந்து வந்த குழு கண்மூடித்தனமாக துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதுடன் காலிஸ்தான் தலைவர் உட்பட 5 பேருடன் தப்பிச்சென்றனர்.
இந்த சிறை உடைப்பு சம்பவம் காரணமாக மாநில சிறைத்துறை இயக்குனர் நப்ஹா சிறைச்சாலையின் மேலதிகாரி மற்றும் துணை அதிகாரி ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்ததுடன் அவர்களைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிறைச்சாலையில் ஆயுதங்களுடன் புகுந்த குழு ஹர்மிந்தர் மிண்ட்டூ உட்பட 5 கைதிகளை தப்பிச் செல்ல வைத்துள்ளனர்.
Nov 27, 2016 @ 08:10
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள நப்ஹா சிறைச்சாலையில் ஆயுதங்களுடன் புகுந்த குழு ஒன்று காலிஸ்தான் விடுதலை இயக்கத் தலைவர் ஹர்மிந்தர் மிண்ட்டூ உட்பட 5 கைதிகளை தப்பிச் செல்ல வைத்துள்ளனர்.
உயர் பாதுகாப்புக்குட்பட்டுள்ள நப்ஹா சிறைச்சாலைக்குள் சிறையில் காவல்துறையினரின் உடை அணிந்து வந்த குழு சிறைக்குள் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதுடன் காலிஸ்தான் தலைவர் உட்பட 5 பேருடன் தப்பிச்சென்றனர். மிண்ட்டூ 2014-ம் ஆண்டு டெல்லி இந்திராகாந்தி விமானநிலையத்தில் பஞ்சாப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.