குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்குமாறு அமெரிக்க புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப்பிடம் கோரப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறாத விடயங்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை நடத்துவதனை தவிர்க்குமாறு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் படைவீரர்கள் ஆகியோரை தம்மால் காப்பாற்ற முடிந்தது எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு சரியான செய்தியை அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
1 comment
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ராஜபக்ஷக்களின் ஆட்சிக் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும், ‘மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறாத விடயங்கள்’, தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை நடத்துவதனை தவிர்க்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் கோரிக்கை வைக்க இருக்கின்றாராம்!
நடத்தி முடிக்கப்பட்ட குற்றச் செயல்களுக்கு எதிரான விசாரணைகளை, தானும் செய்யாது, செய்ய முன்வந்த சர்வதேச அமைப்பையும் செய்யவிடாது தடுக்க நினைப்பவரின் ஆட்சி, எப்படி நல்லாட்சியாக இருக்க முடியும்? அரசியல்வாதிகளை பொறுத்த வரை,’ அக்கரைக்கு இக்கரை பச்சை’, என்பதுதான் உண்மை போலும்? ஆயிரம் எதிர்பார்ப்புக்களுடன் இவர்களைத் தமிழர்கள் அரியணை ஏற்றினாலும், இவர்கள் என்னவோ, தமது நலனையும், கட்சியின் நலனையும் மற்றும் இன நலனையும் மட்டுமே முதன்மையானதாகப் பார்க்கின்றார்கள்!
தான் வழங்கும் வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தும் திராணியற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வாக்குறுதிகளை அள்ளி வீசுவதிலும், வீராவேச வசனங்கள் பேசுவதிலும் மட்டுமே வல்லவர், என்பதை விட வேறென்ன சொல்ல?
திரு. மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஆட்சியில், இனப்பிரச்சினைக்கான தீர்வை எதிர்பார்ப்பது மடமையே!