141
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வாத்துவ பிரதேசத்தில் பொத்துபிட்டிய என்னும் இடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். வாத்துவ கடற்கரைக்கு சென்று திரும்பிய இளைஞர்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முயற்சித்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ரயில் கடவையில் கடமையில் இருந்த நபர் வாகனத்தை நிறுத்துமாறு கோரியதாகவும் அதனை சாரதி பொருட்படுத்தவில்லை எனவும் ரயிலில் மோதுண்ட கார் சுமார் 200 மீற்றர் வரையில் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Spread the love