166
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிழக்கு அலப்போவில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். சிரிய அரச படையினர் முன்நகர்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில் இவ்வாறு பொதுமக்கள் இடம்பெயர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அலப்போ முழுவதையும் கைப்பற்றும் நோக்கில் அரச படையினரும் ஆதரவு தரப்புக்களும் கிளர்ச்சியாளர்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். சுமார் ஐந்தரை ஆண்டுகள் அரச படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் இடம்பெற்று வருகின்ற இந்த மோதல்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love