ஊடகங்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபடவில்லை எனவும் ஊடக சுதந்திரம் தொடர்பிலான தர வரிசையில் இலங்கை முன்னேறியுள்ளதாகவும் ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் ஊடகவியலாளர்கள் எவரும் கொலை செய்யப்படவில்லை எனவும் கடத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ள அவர் எனினும் ஊடகங்களில் பிரசூரிக்கப்படும் விடயங்களை ஒழுங்குப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தொழில்சார் தன்மையுடன் சுயாதீனமாக ஆக்கப்பூர்வமான வகையில் ஊடக நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்த ஊடக அமைச்சர் ஊடகங்கள் மீது எதனையும் திணிக்கப் போவதில்லை எனவும் பலவந்தமாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.