165
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஊடகவியலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளங்களை நிர்ணயிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஊடகவியலாளர்களின் நலன் கருதி இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். ஊடக அமைச்சு குறித்த பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களின் குறைந்தபட்ச சம்பள நிர்ணயம் தொடர்பில் இந்தியாவின் அணுகுமுறை பற்றி கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சுயதீன ஊடக கட்டுப்பாட்டு ஆணைக்குழு ஒன்றை நிறுவும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love