158
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உண்டாவில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் 62 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேற்கு உகண்டா பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பழங்குடியின அரசர் ஒருவரை கைது செய்ததனைத் தொடர்ந்து காவல்துறையினருக்கும் அரசரின் பாதுகாப்பு தரப்பிற்கும் இடையில் வெடித்துள்ள இந்த மோதல் சம்பவத்தில் 16 காவல்துறை உத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
Charles Wesley Mumbere என்ற பழங்குடியின அரச தனியான நாட்டை உருவாக்க சூழ்ச்சி செய்வதாகத் தெரிவித்து உகண்டா காவல்துறையினர் அவரை கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love