165
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஒத்தி வைக்கப்படாது என உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர்கள் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை ஒத்தி வைப்பதற்கு தமக்கு எவ்வித அவசியமும் கிடையாது என குறிப்பிட்டுள்ள அவர் எல்லை நிர்ணயம் தொடர்பிலான பிரச்சினை காரணமாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை ஒத்தி வைக்க நேரிட்டதாகத் தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணயம் குறித்த சர்ச்சைகளுக்கு தீர்வு காணப்பட்டதன் பின்னர் தேர்தல் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love