136
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி மாவட்டத்தில் முதல்முறையாக நடத்தப்படும் கிளிநொச்சி பிரிமியல் லீக் (KPL) 20 க்கு 20 கடினப் பந்து துடுப்பாட்ட போட்டியானது வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட அணிகளைக் கொண்டு நடத்தப்பட்டு வரும் கிளிநொச்சி பிரிமியல் லீக் 20 20 சுற்றுப் போட்டிகளில் 12 அணிகள் கலந்து கொண்ட KPL ,இறுதி போட்டியில் கிளிநொச்சி புதிய பாரதி அணியும் கிளிநொச்சி மத்தியதீர அணிக்குமிடையில் இடம் பெற்றது.
KPL 20 20 சுற்றுப் போட்டியில் புதிய பாரதி அணியினர் நணையசுழற்சியில் வெற்றிகொண்டு துடுப்பாட்டத்தை மேற்கொண்டது 16 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் ,ழந்து 112 ஓட்டங்களை பெற்றது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மத்திய தீர அணி 17.5 ஓவரில் 8 விக்கட்டுக்களை KPL ழந்து 116 ஓட்டங்களை பெற்றதினால் கிளிநொச்சி மத்தியதீர அணி 2 விக்கட்டுக்களினால் வெற்றியை தனதாக்கிக்கொண்டது.
போட்டியின் தொடர் ஆட்ட நாயகனாக கிளிநொச்சி புதிய பாரதி அணியின் மதுசன் தெரிவு செய்யப்பட்டார் வர் KPL தொடரில் 129 ஓட்டங்கள் மற்றும் 10 விக்கட்டுக்களையும் வீழ்த்தி உள்ளார், சிறந்த பந்து வீச்சாளராக கிளிநொச்சி மத்திய தீர அணியை சேர்ந்த அஜித் KPL தொடரில் பதினொரு விக்கட்டுக்களை வீழ்த்தியமைக்காக தெரிவு செய்யப்பட்டார்.
சாதனைகளை படைத்துள்ளவர்களுக்கு காவேரிகலாமன்றத்தின் பணிப்பாளர் வனபிதா ஜேசுவா மற்றும் கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு பிரிவின் வைத்தியர் ஜெயராசா ஆகியோர்கள் சாதனையாளர்களுக்கும் வெற்றியீட்டிய அணிக்கும் வெற்றிக் கிண்ணங்களை வழங்கிவைத்தார்கள்
Spread the love