குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சட்டவிரோதமான முறையில் தங்கியிருக்கும் அகதிகள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப்பின் ஆட்சியில் இவ்வாறான ஓர் நிலைமை ஏற்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக இளம் அகதிகளே இவ்வாறான ஆபத்தை அதிகம் எதிர்நோக்கியுள்ளனர். ஒபாமா நிர்வாகத்தின் போது சட்டவிரோதமாக குடியிருப்போர் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டால் வாழ்வதற்கும் தொழில் புரிவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததன் அடிப்படையில் பெரும் எண்ணிக்கையிலான அகதிகள் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருந்தனர்.
இவ்வாறு தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட சுமார் 7 இலட்சத்து 41 ஆயிரம் அகதிகள் நாடு கடத்தப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டொனால்ட் டராம்ப் அகதிகளை நாடு கடத்த உள்ளதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.