குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஹாவா குழுவின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த 11 பேருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. கொழும்பு மேலதிக நீதவானினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் ஹாவா என்றழைக்கப்படும் குழு ஒன்று தொடர்பு பட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதன்படி பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் இந்தக் குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 11 பேரை கைது செய்திருந்தனர்.
இது தொடர்பிலான வழக்கு இன்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்கேத நபர்களை சரீரப் பிணையில் விடுதலை செய்வதாக நீதவான் அறிவித்துள்ளார்.