164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் ரஸ்யாவிற்கு செல்ல உள்ளார். ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டீனின் விசேட அழைப்பிற்கு அமைய செல்ல உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் மலேசியாவிற்கு உத்தியோகபூர்வமாக செல்ல உள்ள ஜனாதிபதி ஜனவரி மாதத்தில் ஈரான், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கும் உத்தியோகபூர்வமாக செல்ல உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love