இந்திய திரையரங்குகளில் திரைப்படத்தை ஒளிப்பபரப்புவதற்கு முன்பு தேசியக்கீதம் இசைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
மேலும் தேசியக்கீதம் இசைக்கப்படும் நேரம் திரையில் தேசியக்கொடி காட்டப்பட வேண்டும் எனவும் அந்த நேரம் மக்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனை செயல்படுத்தாத சினிமா தியேட்டர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுகளின தலைமை செயலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும் என்றும் இதுதொடர்பான விளம்பரம் ஊடகங்களில் வெளியிடப்படும் என்றும் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.