அரை நூற்றாண்டாக கொலம்பிய அரசாங்கத்துக்கும் பார்க் கிளர்ச்சியாளருக்கும் இடையே இடம்பெற்று வரும் மோதலை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் திருத்தியமைக்கப்பட்ட புதிய அமைதி உடன்படிக்கைக்கு கொலம்பிய நாடாளுமன்றத்தின் மேலவை ஒப்புதல் அளித்துள்ளது.
முதல் கையெழுத்தான உடன்படிக்கையை கடந்த மாதம் இடம்பெற்ற கருத்தறியும் வாக்கெடுப்பில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பொதுமக்கள் நிராகரித்திருந்தனர்.
இந்தநிலையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய உடன்படிக்கை முன்பிருந்ததை விட பலம் வாய்ந்தது என்றும கிளர்ச்சியாளர்கள் கோரிய மாற்றங்களையும் உள்ளடக்கி இது உருவாக்கப்பட்டுள்ளது எனவும் கொலம்பிய ஜனாதிபதி ஜுவான் மானுவெல் சான்டோஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த புதிய உடன்படிக்கை கொலம்பிய நாடாளுமன்றத்தின் கீழவையின் ஒப்புதலுக்காக அனுப்பப்படவுள்ளது