222
இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலப் பகுதியில் இன்றைய தினம் இராணுவத்தினருக்கு சொந்தமான சீட்டா ரக உலங்குவானூர்தி ஒன்று விழுந்து நொருங்கிய விபத்தில் 3 உயரதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இன்றையதினம் முற்பகல் ஏற்பட்ட இந்த விபத்து தொடர்பான தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் குறித்த பகுதிக்கு சென்று உயிருக்கு; போராடிக் கொண்டிருந்த ஒரு அதிகாரியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் எனவும் விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love